இவரை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்… ரோபோ சங்கரின் மகளுக்கு திருமணம் மாப்பிள்ளை தெரியுமா??

சினிமா

ரோபோ சங்கர் பிரபல தொலைக்காட்சியிலிருந்து வெள்ளத்திரைக்கு சென்றவர். இவர் தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் குடும்பங்களில் ஒன்று தான் ரோபோ சங்கரின் குடும்பம்.

இவரின் மகள், மனைவி என அனைவரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என அனைத்து விடயங்களிம் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். ஆனால் நடிகர் ரோபோ சங்கருக்கு சமீப காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இப்படியொரு நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் இவர்கள் குல தெய்வ கோயிலில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்..

அப்போது இந்திரஜா அவரின் மாமாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இருந்துள்ளது. இந்திரஜா தமிழில் பிகில் மற்றும் விருமன் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பெரியதாக பட வாய்ப்புகள் இல்லை.

மேலும் இந்நிலையில் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “நீங்கள் இருவரும் திருமணம் செய்ய போகிறீர்களா ”என கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு இந்திரஜா “ஆமாம் ஆனால் திகதி இன்னும் முடிவு செய்யவில்லை..” என்று கூறியுள்ளார்.