உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்… கவலை வேண்டாம்… இதைப் பின்பற்றினாலே போதும்… உடல் சூடு தணிந்து விடும்…!!

health

கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து வறட்சி ஏற்படுவதால் பூமியின் இயற்கை குணம் மாறுபட்டு உயிரினங்கள் உடல் நலத்தை இழக்கின்றன. மனித உடல் அமைப்பின் உறுப்புகள் 70-80 சதவீதம் நீரால் ஆனது. வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து 20-30 சதவீத நீர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் உடல் சூடு ஏற்படுகின்றது.

உடல் சூடு காரணமாக பல நோய்கள் ஏற்படுவதற்கு மூல காரணமாக அமைகின்றது. உடல் சூட்டால் ஏற்படும் நோய்கள் பற்றி பார்க்கலாம்.

உடல் அதிகமான சூட்டை உணரும் போது வாய் பகுதிக்குள் கொப்பளம் ஏற்படும். அதிகளவில் நீராகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக கரும்புச் சாற்றை நீர் ஆகாரமாக எடுத்துக் கொள்ளலாம். கரும்புச்சாறு உடல் சூட்டைத் தணிக்கும்.

உடல் சூடு அதிகமாக இருப்பதால் கண் சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும். உடல் அதிகமான வெப்பத்தை உணரும் போது கண் எரிச்சல் ஏற்படும். கண்களில் நீர் வடிதல், கண்களில் கொப்பளம்  ஏற்படும். இதற்கு இளநீர், பதநீர், நுங்கு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இது கண் எரிச்சலைக் குறைப்பதுடன் உடல் சூட்டையும் தணிக்கும்.

உடல்சூடு அதிகரித்தால் பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இளநீர் பருகுவதன் மூலம் உடல் சூட்டை தணிக்கலாம். கோடைக்காலத்தில் நாம் அருந்தும் நீரினாலும், உணவினாலும் வயிற்றுக்கோளாறுகள் வரும். புதினாவைத் துவையல், சட்னி எனப் பல வடிவங்களில் சேர்த்துக் கொண்டாலும் வயிற்றுக்கோளாறுகள் சரியாகும்.

உடல் சூடு அதிகமாகும் போது வெப்ப சோர்வு ஏற்பட்டு தலைவலியை ஏற்படுத்தும்.  உடல் வெப்பம் அடைகின்ற போது மலச்சிக்கல் ஏற்படுகின்றது. மலம் கழிப்பதில் சிரமம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் எரிச்சலும் ஏற்படலாம். தர்பூசணியில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. இதில் பொட்டாசியம் சத்தும் நிறைந்திருப்பதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் நீங்கும். நார்ச்சத்து மற்றும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும்…