எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்… மறைந்த நடிகர் மாரிமுத்து இடத்தை பிடிப்பாரா இவர்…!!

சினிமா

இந்தம்மா ஏய் எனும் வசனத்தின் மூலம் மட்டும் பிரபலமாகாமல் தான் நடித்த சீரியலையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் தான் நடிகர் மாரிமுத்து. இவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இவருடைய மரணம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. திரையுலகினர் பலரும் நேரில் வந்து மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று மாலை மாரிமுத்துவின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்யப்படவுள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மரணமடைந்தால், அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என கேள்வி எழுந்தது. மேலும்இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, மாரிமுத்து நடித்து வந்த இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார்.  என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. நடிகர் வேல ராமமூர்த்தி வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான நடிகர் அதுமட்டுமின்றி பிரபலமான எழுத்தாளர் ஆவார்..