என்னடா இது சாம்பார்ல பருப்பையே காணும் .. ராதிகாவையும் கோபியும் வச்சு செய்யும் தாத்தா .. இதோ கலகலப்பான பாக்கியலட்சுமி ப்ரொமோவை நீங்களே பாருங்க ..!!
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவால் கோபி ராதிகா வசிக்கும் வீட்டிற்கு தாத்தாவும் வந்துள்ள கொமடியான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ள கதையாக காட்டப்பட்டு வந்தது.பின்பு தனது முன்னாள் காதலியையே இரண்டாவது
திருமணம் கதாநாயகன் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவருடன் வசித்து வருகின்றார்.கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.இனியாவின் தவறை புரிய வைப்பதற்கு அவரது தாத்தா கோபி தனது இரண்டாது மனைவியுடன் வசிக்கும் வீட்டிற்கே சென்றுள்ளார்.
பிறகு சாதம், சாம்பார், அப்பளம் உள்ளிட்டவற்றை பரிமாற கோபி சூப்பர் என புகழ்ந்து தள்ள தாத்தா இது என்ன கார குழம்பா என கேட்டு நக்கல் அடிக்கிறார். அத்தோடு ராதிகா இல்ல அது சாம்பார் என்ன சொல்ல பருப்பையே காணும் என கேட்க உள்ள இருக்கு என கூறுகிறார். சாம்பார்ல பருப்பு நிறைய போடணும் வாசனை அப்படி வரணும் என சொல்கிறார்.
பின்னர் சாப்பாட்டை குக்கரில் வைத்தயா? எனக்கு சுகர் இருக்கறதுனால குக்கரில் வைக்கக்கூடாது பானைல வச்சி அலையவிட்டு வடிக்க வேண்டும், பாக்கியா அப்படித்தான் செஞ்சு தருவார் என கூற ராதிகா கோபியை முறைக்கிறார். கோபி என்ன செய்வது என தெரியாமல் தவித்து சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிட்டு சூப்பர் என பாராட்டிக் கொண்டே இருக்கிறார்.இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.