தொலைக்காட்சி தொடரில் டாப் 10ல் டி ஆர் பியில் இருந்து பல வாரங்களாக மக்கள் மனதை ஈர்த்து வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது விறுவிருப்பான கதை சென்று கொண்டிருக்கும் போது லட்சுமி அம்மா மரணம் அடையும் காட்சி அனைவரையும் அதிர்ச்சி ஆக்கியது.
இதையடுத்து ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா விலகி வேறொருவர் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. அவருக்கு பதில் ஈரமான ரோஜா சீரியல் நடிகை சாய் காயத்ரி நடிக்கவுள்ளார்.
இன்றிலிருந்து அவரின் காட்சிகள் ஒளிபரப்பாக்கவுள்ளது.தற்போது கண்ணனை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். கண்ணன் காதலிக்கும்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வைஷாலி.
அதன்பின் கல்யாணம் செய்யும் போது ஐஸ்வர்யாவாக தீபிகா நடித்தார். தற்போது கல்யாணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யாவாக சாய் காயத்ரி நடிக்கவுள்ளார்.
இப்படி மனுஷன் காதலிக்கிறது ஒரு பொண்ண, கல்யாணம் பண்றது இன்னொரு பொண்ணு, வாழ்றது வேற பெண்ணுடனா? என்றெல்லாம் சீரியல் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கண்ணனுக்கு சாய் காயத்ரி அக்கா போல இருக்கிறார். அவரை மாற்றி வேறொரு இளம் சீரியல் நடிகையை போடுங்கள் என்று கூறி கிண்டலடித்து வருகிறார்கள்.