சின்னத்திரையில் முக்கிய ஹீரோயினாக இருப்பவர் ஷபானா. இவர் செம்பருத்தி சீரியலில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். தற்போது அவர் சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை தான் ஷபானா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் குடும்ப எதிர்ப்பை மீறி ஷபானா ஆர்யனை திருமணம் செய்துகொண்டார்.
ஆர்யன் மற்றும் ஷபானா இருவருக்கும் திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது ‘விரைவில் குட்டி ஷாப்புவை launch பண்றோம்’ என ஆர்யன் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். அதனால் ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்…