சினிமாவில் பொதுவாகவே நடிக்கும் நடிகர், நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமாகிறார்களோ அதை காட்டிலும் அந்த படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தைகள் படங்களில் ஒரு சில கா ட்சிகளில் தோன்றினாலும் சு ட்டித் தனமான நடிப்பால் மக்கள் மனதில் வெ குவாக இடம் பிடித்து விடுகின்றனர்.
மேலும் அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் தற்போது வளர்ந்து வெள்ளித்திரையில் பல படங்களில் ஹீரோ ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் கமல், சிம்பு தொடங்கி மீனா என பல முன்னணி நடிகர்கள் கூட குழந்தை நட்சத்திரமாக தான் தங்களது திரைபயணத்தை தொடங்கினார்கள். இப்படி இருக்கையில் கடந்த 2005-ம் ஆண்டு பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.
இந்த படம் பே ய் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், நாசர் என பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றில் குழந்தையை நியாபகம் இருக்கிறதா ஆம் தத்திந்தோம் தகதிந்தோம் எனும் ஆரம்பிக்கும் பாடலில் வரும் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..
அந்த கதாபாத்திரத்தில் சிறிது நேரமே நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் தனக்கென நீங்காத இடத்தை பிடித்தார். அந்த குழந்தையின் பெயர் பிரகர்ஷிதா. இந்த படத்தை தொடர்ந்து பல படங்கள் மற்றும் தொடர்களில் சாமியாக நடித்துள்ளார். நடிப்பை தொடர்ந்து படிப்பிலும் கவனம் செலுத்தி வந்த இவர் பி எஸ் சி எலக்ட்ரானிக் படிப்பை முடித்த பொம்மி தற்போது தனது திருமணத்தையும் முடித்துள்ளார்.
மேலும் இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பல தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் ரஜினிக்கு பதிலாக லாரன்ஸ் நடிக்க போவதாகவும் முதல் பாகத்தின் தொடர்ச்சியே இந்த பாகம் என கூறியிருந்தார்கள். அப்படி இருக்கையில் முதல் பாகத்தில் நடித்த பொம்மி இந்த பாகத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பொம்மி தற்போது போஸ் ப்ரோடக்சன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இதனை தொடர்ந்து பல படங்களின் கதைகளை கேட்டு வரும் பொம்மி தன்னை விரைவில் வெள்ளித்திரையில் பார்க்கலாம் என கூறியுள்ளார். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வை ரளாகி வருகிறது…