பிரபல விஜய் தொலைக்காட்சியில் புதுமுக நாயகன் முத்துவாக நடிக்க வேலைக்காரன் சீரியல் நடிகை கோமதி ப்ரியா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில புதுமுக நடிகர்களும் இந்த தொடரில் நடிக்கிறார்கள்.
புதியதாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது TRPயில் அதிக ரீச் பெற்று வருகிறது. நாயகன்-நாயகி ஜோடி செம கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஷ்ணுகாந்த் வைத்து சிறகடிக்க ஆசை சீரியல் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வலம் வருகிறது.
மேலும் அதைப் பார்த்த உடனே ரசிகர்கள் நாயகன் மாற்றப்படுகிறாரா என ஷாக் ஆகியுள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால் சிறகடிக்க ஆசை சீரியல் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாம். அதில் நாயகனாக விவாகரத்து பிரச்சனையில் சிக்கிய விஷ்ணுகாந்த் நடிக்க இருக்கிறாராம்…
View this post on Instagram