பிக்பாஸ் விக்ரமன் சத்தமே இல்லாமல் திருமணம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக இருந்த விக்ரமன் பிக்பாஸ் சீசன் 6 ன் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் தான் டைட்டில் வின்னர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நடிகர் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். பின்னர் விக்ரமன் ரன்னராக வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரால் அறியப்பட்ட விக்ரமன் திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்த ப்ரீத்தி கரிகாலன் என்பவரை திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம் நேற்றைய தினம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்து மத முறைப்படி தாலி கட்டியும், கிறிஸ்துவ முறைப்படி மோதிரமும் மாற்றிக்கொண்டனர். ப்ரீத்தி கரிகாலன், முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனின் பேத்தி எனக் கூறப்படுகின்றது. இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்து முடிந்த திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.