பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆண்டு வரை ஒளிப்பரப்பான மெகா தொடர் தான் திருமதி செல்வம். இந்த தொடர் எளிமையான கதை களத்துடன் நடுத்தர மக்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும் திருமதி செல்வம் தொடரை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடினர்.
மேலும் சஞ்சீவ் மற்றும் அபிதா திருமதி செல்வம் தொடரின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்கள். திருமதி செல்வம் தொடர் இருவருக்கும் பெரிய பெயரை பெற்று தந்தது அது மட்டுமின்றி ரசிகர்கள் கூட்டமும் ஏராளமாக உள்ளது.
கதாநாயகி அபிதா திருமதி செல்வம் தொடருக்கு பின் வேறு எந்த ஒரு தொடரிலும் நடிக்கவில்லை. ஆனால் தற்போது அவர் மீண்டும் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
ஆம், பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகவுள்ள மாரி என்ற புதிய தொடரில் அபிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
So #IthuNammaTime மறக்காம வந்துருங்க.! ?
மாரி | ஜூலை 4, நாளை முதல் திங்கள் – சனி | இரவு 8.00 மணிக்கு.#Maari #Ashikapadukone #Newserial #Zeetamilpromo #promo #ComingSoon #Zeetamil #Abitha pic.twitter.com/zvUzUgHqYp
— Zee Tamil (@ZeeTamil) July 3, 2022