தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் தன் மகன் விஜய்யை நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.அதுமட்டுமின்றி தன்னுடைய அடுத்தடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்தார். அதன் பின் விஜய் ஒரு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றும் அவருக்கு ஆறுதலாக இருந்து வந்தார்.
மேலும் சமீபகாலமாக நடிகர் விஜய் தன் அப்பா அம்மாவை சரியாக பார்த்துக்கொள்வதில்லை. அவர்கள் மீது பு காரளி த்து அவர்களை பகைத்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை தன் வாழ்க்கையில் நடந்த ஆரம்ப காலக்கட்ட சினிமா வாழ்க்கை முதல் இன்று வரையில் நடந்தவற்றை அனைத்தையும் யூடியூப் சேனல் மூலம் கூறி வருகிறார்.
அந்த வகையில் அவரது இரண்டாம் திருமணம் குறித்த தகவலை முதன் முறையாக தெரிவித்துள்ளார். நான் ஒரு கிறிஸ்தவர், ஷோபா இந்து குடும்பத்தில் பிறந்தவர். எம்ஜிஆரின் துணைவியார் கமலாம்பாள் அவர்களின் முன்னிலையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எந்த மதம் முறைப் படியும் ந டக் காமல் அவர் தாலி கொடுத்து நான் கட்டினேன்.
மேலும் ஒரு நாள் ஷோபா என்னிடம் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொள்வோமா என்று கூறினாள். நான் ஷோபாவை கிறிஸ்த்தவளாகிவிடு என்று கூறியது கிடையாது. ஏன் தி டீரென கேட்கிறாய் என்று கேட்டேன். அதற்கு ஒரு வார்த்தை சொன்னால். ரெண்டு பேரும் கடலில் தனித்தனி படகில் செல்கிறோம். கடலில் அப்போது அலை அதிகமாக வந்தால் ரெண்டு பேரும் ஒரே இடத்தில் கரை சேர முடியாது என்று கூறினாள்.
அப்போது தான் நாங்கள் இரண்டு பேரும் ஒரே மதக்கோட்பாடோடு நடக்க வில்லையோ என்று நினைத்தேன். அப்படி தான் இரண்டாம் முறை கிறித்தவ முறைப்படி கல்யாணம் செய்து கொண்டோம் நானும் ஷோபாவும். இரண்டாம் திருமணத்தில் விஜய் சா ட்சியா க நடைபெற்றது.