என்னது… விஜே பிரியங்காவுக்கே ரூட்டை போட்ட திருமணமாகாத 43 வயது பிரபல நடிகர்!! யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் கங்கை அமரனின் மகனாகவும், நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் என பன்முக திறமைக் கொண்டவராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரேம்ஜி அமரன். இவர் வல்லவன் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி அதன் பின் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.

மேலும் தற்போது 43 வயதாகும் நடிகர் பிரேம்ஜி இன்னும் திருமணமாகாமல் இருந்து வருகிறார். நடிகைகள் மாடல்கள் போடும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே வெளியிட்ட க்யூட் புகைப்படத்தை பார்த்த பிரேம்ஜி ஹார்ட்டின் விட்டு ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு பிரியங்காவும் காதல் இமோஜியை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசுல இவரை யாராது கண்ட்ரோல் பண்ணுங்க என்று கூறி வருகிறார்கள்…