என்னது… 55 வயதை கடந்தும் 600 திரைப்படங்களுக்கு மேல் நடித்தும் திருமணம் செய்யாமல் இருக்கும் பிரபல நடிகை!! அட இவர் தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களுடனும் நடித்த நடிகையாச்சே!! யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது புதிதாக நிறைய நடிகர் நடிகைகள் அறிமுகமாகி உள்ளன. அந்த காலகட்டத்தில் இருந்தது போல தற்பொழுது இல்லை. அதே போல் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு துறை என்று கூட கூறலாம். சினிமாவிற்கு தேவையானது கதாநாயகன்-கதாநாயகி பாடல் இசை மட்டுமல்ல முக்கியமான தேவை காமெடி நடிகர்கள்.

மேலும் அப்படி காமெடியிலும் பெண்கள் கலக்கி சாதனை ப டைத்தது இரண்டு நடிகைகள் குறிப்பாக நடிகை மனோரமா ஆச்சியை கூறலாம். அவருக்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்தும் பெண் காமெடி நடிகராக சினிமாவில் வளர்ந்து வந்தது தற்போது பல பேருக்கு முன்னோடியாக இருப்பவர் கோவை சரளா.

இவர் 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் பாக்யராஜ் திரைப்படத்திலேயே பல படங்கள் நடித்தார். அதுமட்டுமல்லாமல் கமலஹாசன்க்கு ஜோடியாக நடித்த பெருமை இவருக்கு உண்டு. ஏனென்றால் காமெடி நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடித்தது இல்லை இவரே முதன் முறையாகும். கமலஹாசன் மற்றும் கோவை சரளா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சதி லீலாவதி.

இப்படி இருக்கையில் ஒரு காலகட்டத்திற்கு மேல் நடிகர் வடிவேலுடன் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் மற்றும் காமெடி காட்சியில் வரும் காமெடி மக்களை மிகவும் க வரும் வண்ணம் இருந்ததால் இவர்களது ஜோடி நீண்ட நாட்கள் மக்களை மகிழ்வித்து வருகிறது. தற்பொழுது அம்மா கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கி வரும் நடிகை கோவை சரளா 59 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஏன் என்று கேட்டால் அவருடைய சகோதரிகளுக்காக சம்பாதிக்க நடிகை கோவை சரளா திருமணமே செய்து கொள்ளவில்லை என்று கூறினார். நடிகை கோவை சரளா ஒரு நல்ல காமெடி நடிகை மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் இல்லார். இதனை அறிந்த ரசிகர்கள்  அவரை வாழ்த்தி வருகின்றன.

\