என்னுடைய திருமணம் அவருடன் தான்… ஓபனாக கூறிய நடிகை ஸ்ரீதிவ்யா!! அட இவரா? யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் முதல் படத்திலேயே நம்ம வீட்டு பொண்ணு என்ற பெயரை பெற்ற இவர் மீண்டும் அவருடனே ஜோடி சேர்ந்து காக்கி சட்டை என்ற படத்தில் நடித்தார்.

அதன் பின் ஜீவா, ஈட்டி, மருது, பெங்களூரு நாட்கள், பென்சில் போன்ற பல படங்களில் நடித்தார். அதன் பின் 5 வருடங்களுக்கு மேலாக நடிகை ஸ்ரீதிவ்யா எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் தற்போது ரெண்டு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரீதிவ்யாவிடம் உங்களது காதலன் யார், யாரை திருமணம் செய்ய போகிறீர்கள் என பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம் தான். என்னுடைய காதலனை தான் திருமணம் செய்துகொள்வேன் எனகூறியுள்ளார். ஆனால் யார் அவர் எப்போது திருமணம் என்பதை அவர் கூறவில்லை…