90s கால கட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த பல நடிகைகளில் முக்கியமானவர் நடிகை குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் நடிகர் குஷ்பூ. இப்படத்தில் இவருடைய நடிப்புக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார். இவர் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் கார்த்தி நடிப்பில் வெளியான வருஷம் 16. இதனைத் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.
பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து வந்தார் குஷ்பு. தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில் கட்டப்பட்ட ஒரே ஒரு நடிகை குஷ்பு ஆவார். அதன் பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்கத் தொடங்கினார். எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து வி ல கினார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு. இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். தற்போது நடிகை குஷ்பு தனது அம்மாவின் காலை மடியில் வைத்து அவருக்கு நகங்களை வெட்டியுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாயை தன்னுடைய குழந்தை போல பார்த்துக் கொள்ளும் நடிகை குஷ்பூவை பெருமளவு பாராட்டி வருகின்றனர். மேலும் இது போல தாயை பார்த்துக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.