ஜிபி முத்து டிக்டாக் செயலி மூலம் செம்ம பேமஸ் ஆனவர், இவர் தற்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார், அதுக்குறித்து பார்ப்போம் மற்றும் அவரின் சமீபத்திய பிரச்சனையும் பாருங்க..
சன்னி லியோன் இந்திய திரையுலகின் முன்னணி நடிகை. இவர் இதுநாள் வரை பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
மலையாள மற்றும் தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார், இந்த நிலையில் முதன் முறையாக இவர் தமிழில் ஒரு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்திற்கு ஓ மை கோஸ்ட் என்று டைட்டில் வைத்துள்ளனர், இதில் இவர் பேயாக நடிக்கவுள்ளாராம்.
இவர் பயமுறுத்த போவது சதீஷ் மற்றும் ஜிபி முத்துவை தானாம், ஜிபி முத்து சமீபத்தில் ஒரு வீடியோவில் புலம்பி தள்ளிவிட்டார்.
என்னெவென்றால் புதிதாக யுடியுப் சேனல் தொடங்குபவர்கள் பலரும் ஜிபி முத்து வீட்டு வாசலில் தினமும் வந்து நின்று எனக்கு ப்ரோமோஷன் செய்துக்கொடு என்று கேட்கிறார்களாம்.
ஒரு கட்டத்தில் இவை அவருக்கு பெரிய டார்ச்சராக அமைய, அவர் கெஞ்சி கதறி அழுது இனி இப்படி செய்யாதீங்க என வீடியோ வெளியிட்டுள்ளார்.