என்ன கமல் சார் சொல்றீங்க? இது உண்மையாகவா? அப்ப இவங்க மட்டும் பிக்பாஸ்-க்கு வந்தா! நானே பார்ப்பேனே!!! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

சினிமா

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது…

சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது அந்த நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜ ய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருக்கிறது என்று உறுதியாகிவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி என்டிமால் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள் ளதாம். எனவே, இனி வரும் 6 சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும். கடந்த சில மாதங்களாகவே இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் அடிக்கடி அடிபட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த சீசனில் கலந்துகொள்ள பிரபல நடிகர் ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் பிபி ஜோடியில் வனிதா-வுக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் முட்டிக்கொண்டது. இந்த விவாகரத்தில் வனிதாவின் அடாவடிக்கு அடங்காமல் கெத்து காட்டி இருந்தார் ரம்யா. அது போக அதன் புரோமொ சூட்டிங் நடந்து வருவதாக கூட தகவல்கள் வெளியாகியுள்ளது.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…