ஒரே நடிகருக்கு மகள், மனைவி, மற்றும் தங்கையாக நடித்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் !! அந்த நடிகர் யாரென்று தெரியுமா இதோ ..!!
1983 யில் வெளியான வெள்ளை மனசு படத்திலிருந்து 2020 வெளியாக இருக்கும் பார்ட்டி படம் வரை இவர் நடித்துள்ளார்.இவர் தலைவர் ரஜினிகாந்த அவர்களுடன் சேர்ந்து நடித்து வெளியான படையப்பா படம் தான் இவர் பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற செய்தது.மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வளம் வந்த, ரம்யா கிருஷ்ணன் ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் மகள், மனைவி, தங்கை ஆகிய வேடங்களில் நடித்துள்ள சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
30 ஆண்டுகளாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் ரம்யா கிருஷ்ணன்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘படையப்பா’ படத்தில் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாத ஒன்று.
படையப்பா படத்திற்கு பின், இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது, இவர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராஜமாதா ‘சிவகாமி தேவி’ கதாப்பாத்திரத்தில் நடித்த பாகுபலி திரைப்படம்.
ஐம்பது வயதை கடந்து விட்ட ரம்யா கிருஷ்ணன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிகவும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவரை பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் நாசருக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார், அதே போல் படையாப்பா படத்தில் தங்கையாகவும், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் மகளாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.