தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அசின். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். நடிகை அசின் கடந்த 2016 -ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி இவர்களுக்கு ஆரின் என்ற மகள் உள்ளார். சமீபத்தில் அசின் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் இதனால் அசின் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகை அசின் நாங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இது போன்ற லாஜிக்கே இல்லாத செய்தி ஒன்று வந்துள்ளது.
இந்த மாதிரியான செய்திகளை பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்…