பிக் பாஸ் டைட்டில் வின்னர் நடிகருக்கு பிரபல நடிகைக்கும் திருமணம் என்ற செய்தி இணையதளங்களில் அதிகமாக வலம் வர ஆரம்பித்து இருக்கிறது. இந்த செய்தியினை பார்த்து பெரும் ஷாக்காகி இருக்கிறார் அந்த பிக் பாஸ் பிரபலம். மேக்னா ராஜ என்ற நடிகை சில வருடங்களுக்கு முன்பு ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரியின் மகனும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவும் திருமணம் செய்து கொண்டனர், இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக காதலித்து இந்த திருமணத்தை திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த திருமண வ்பால்கையில் பெரிய நாட்கள் நீடிக்கவில்லை திருமணம்முடிந்த இரண்டே வருடங்களில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிரஞ்சீவி காலமானார். அப்பொழுது கர்ப்பமாக இருந்த மேக்னா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயர் வைத்துள்ளார். இப்போது அவர் தான் நடிக்கும் படங்கள் உண்டு அவரின் மகன் உண்டு என இருந்து வருகிறார்.
அப்படி இருக்கும் அவருக்கு நடிகரும், பிக் பாஸ் கன்னடா சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவருமான பிரத்தமுக்கும், விரைவில் திருமணம் என்று யூடியூபில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ் கிடைத்திருக்கிறது. அந்த வீடியோ பிரத்தம் கண்ணிலும் பட்டுள்ளது. வீடியோ குறித்து பிரத்தம் ட்விட்டரில் கன்னடத்தில் கூறியிருப்பதாவது
நானும் இதனை மற்றவர்களை போல பெரிதாக எடுத்து கொள்ளாமல் விட்டு விடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் இதற்கு 2.70 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது. வியூஸ் மற்றும் பணத்திற்காக சேனல்கள் இறங்கும்போது சட்டப்படி எதிர்கொள்வது தான் ஒரே வழி. சட்டப்படி அந்த வீடியோக்களை நீக்கும்போது அது பிற சேனல்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றார்.
இந்த வீடியோவில் இருக்கும் செய்தி உன்,உண்மை இல்லை என்றும், இப்படி நான் பாட்டுக்கு என் வேலையினை செய்து வரும் நேரத்தில் இப்படி செய்வது மனவேதனையை தருகிறது என்று கூறி இருக்கிறார். மேக்னா ராஜ் மறுமணம் செய்வதில் தவறு இல்லை. ஆனால் இது போன்ற வதந்தியை பரப்புவதை ஏற்க முடியாது என்கிறார்கள். திருமண வீடியோ குறித்து மேக்னா ராஜ் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.