பொதுவாக வாழைப் பழங்களில் கருப்பு புள்ளிகள் இருந்தால் நாம் அந்த பழத்தை சாப்பிட மாட்டோம். ஏனென்றால் அது நல்லா இருக்காது. உண்மையில் கருப்பு புள்ளி இருந்த வாழைப்பழம் தான் உடலுக்கு ஆரோக்கியமானது. பழுத்த அல்லது கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் கெட்டு விட்டது என்று நாம் அதை தூக்கி எறிந்து விடுகிறோம். இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
வாழைப் பழத்தில் டிரிப்டோபென் அதிகமாக உள்ளது. கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் டிரிப்டோபென், செரோடோனினாக மாற்றப்பட்டு மன அழுத்தம் குறைய உதவுகிறது. எல்லா பழங்களிலும் அதிகமாக இயற்கை சர்க்கரை அளவு இருக்கிறது. ஆனால் வாழைப்பழத்தில் தான் ஃபுருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் என மூன்றும் அதிகமாக உள்ளது.
இது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளிக்கிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தை சீராக இயக்க உதவுகிறது. கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தில் இருக்கும் கால்சியம் சத்து எலும்பின் அடர்த்தியை சீராக்குகிறது. தினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால் மூளைக்கு தேவையான அளவு சக்தி கிடைக்கிறது. இதில் இருக்கும் அதிகளவிலான பொட்டாசியம் நியூரல் செயல்திறனை, செல்லுலார் செயல்பாட்டினை சீராக்குகிறது.
காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதற்கு பதிலாக ஒரு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதால் உடல் மற்றும் மூளையை சுறு சுறுப்பாக இயங்க வைக்கும். தினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால் குறைந்த இரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் இதய நலனை மேம்படுத்த உதவுகிறது.
வீடியோ இதோ..