கர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லாந்து படுத்தால் குழந்தை எப்படி பிறக்கும்… கர்ப்பமாக இருக்கும் போது வேறு எப்படி படுக்க வேண்டும்…!!

Tamil News

பெண்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலம் நெருங்கி விட்டாலே ஒரு சிலருக்கு மனதில் பயம் இருக்கும். தினமும் அவர்கள் செய்யும் வேலைகளிலும் கவனம் வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லாக்க மற்றும் குப்புற படுத்து தூங்குவது தவறான விஷயம்.

இப்படி மல்லாக்க படுத்து தூங்குவதால் சில நேரங்களில் கருச்சிதைவை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமின்றி குழந்தை குறை மாதத்தில் இறக்க வாய்ப்புகள் உண்டு. தாய்மார்கள் மல்லாக்க படுக்கும் போது குழந்தையின் மொத்த எடை இரத் த குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி மல்லாக்க படுக்கும் போது குழந்தைக்கு தேவையான இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய் விடுகின்றன. இதை தாய்மார்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். கர்ப்பமான பெண்களுக்கு தூங்கும் நிலை மிக முக்கியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் இடது புறமாக ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும்…