காதலிக்க ஆள் தேவை என பிக்பாஸ் லாஸ்லியா போட்ட பதிவால் வரிசையில் காதல் சொல்லும் ரசிகர்கள்!!! நீங்களே பாருங்க.. இணையதளத்தில் வை ரலாகும் தகவல் இதோ ..!!

சினிமா

தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை லொஸ்லியா. இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் பின்னர் தோழி ஒருவரின் உதவியுடன் சென்னை வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் கவினுடன் லொஸ்லியாவிற்கு ஏற்பட்ட காதல் அதிகம் பேசப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்ததுமே இருவர்களின் காதல் முடிவுக்கு வந்தது.

ஒருவருடன் ஒருவர் பேசாமல் பிரிந்தனர். இப்போதும் லாஸ்லியா கவின் இருவரும் ஒன்றாக சேர்ந்து விடுவார்கள் என்று நம்பி இருக்கின்றனர்.

இந்த நிலையில் கவின் வேறு பெண்ணை காதலிப்பதாக செய்திகள் வெளியானது. சரி அப்போ லொஸ்லியாவிற்கு என்ன பதில், லொஸ்லியாவை நீங்கள் காதலிக்கவில்லையா என்ற கேள்வியை ரசிகர்கள் கவினிடம் கேட்டு வந்தனர்.கவினும் லொஸ்லியாவும் அமைதியாகவே இருந்தனர்.

தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது, லொஸ்லியா நேற்றைய தினம் புகைப்படம் ஒன்று வெளியிட்டதுடன் அதில் ” தன்னை நேசிக்கக் கூடிய ஒருவரை தேடுவதாக பதிவிட்டுள்ளார்”! இதனை பார்த்த பலரும் லொஸ்லியாவிடம் காதல் சொல்ல ஆரம்பித்துள்ளனர். நல்ல கணவர் கிடைக்க சிலர் வாழ்த்து கூறி வருகின்றனர்..