இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததது. இந்த படத்தில் திரிஷாவின் அம்மாவாக நடித்தது வேறு யாரும் இல்லை நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான ‘ஈசன்’ படத்தில் ஜில்லாவிட்டு ஜில்லா’ என்ற பாடலில் தனது நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்த சுஜாதா தான். இவர் சிறு வயதில் இருந்தே கோடம்பாக்கத்தில் இருந்து வந்துள்ளது.
இவர் சிறு வயது முதலே நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அதன் பின்னர் நடன பள்ளியில் சேர்ந்து பல்வேறு பரிசுகளையும் வாங்கியுள்ளார். அதன் பின்னர் சினிமாவில் குரூப் டான்ஸரா சேர்ந்து ஆடத் தொடங்கினர். அதன் முதல்ல ரகுமாஸ்டர் கிட்ட குரூப் டான்ஸரா சேர்த்துள்ளார்.
அதன் பின்னர் சுந்தரம் மாஸ்டர் கிட்டசேர்ந்த இவர் சூப்பர் ஸ்டார் நடித்த தளபதி படத்தில் சூப்பர் ஹிட் அடித்த ராக்கம்மா கையத்தட்டு காட்டுக்குயிலு போன்ற பாடல்களில் குரூப் டான்சராக ஆடியுள்ளார். அதனை தொடர்ந்து ரகுராம் மாஸ்டர் சுந்தரம் மாஸ்டர் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் இயக்குனர் கதிர் இயக்கிய காதல் தேசம் படத்தில் இடம் பெற்ற ‘முஸ்தஃபா முஸ்தஃ பா’ பாடல் மூலமா தான் நான் மாஸ்டர் ஆகியுள்ளார். அதன் மூலமாக இவருக்கு நல்ல பெயர் கிடைக்க வேய தொடர்ந்து பகைவன் நேசம் தொடங்கி சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார் சுஜாதா அவர்கள்.
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றல் பேசியுள்ள விஜய்யின் கில்லி படம் குறித்து பேசுகையில் நடிகர் விஜய் சாரோட ‘கில்லி’ பட சமயம் டைரக்டர் தரணி சார் ஆபிஸ்ல இருந்து போன் வந்தது. முதல் முறையா எனககுப் பிடிச்ச விஜய் சாருக்குக் கொரியோகிராஃபி பண்ணத்தான் கூப்பிடுறாங்கன்னு ஆர்வமா இருந்தேன்.
அப்புறம்தான் தெரிஞ்சது அந்தப் படத்துல த்ரிஷாவுக்கு அம்மாவா நடிக்கக் கூப்பிறாங்கன்னு. ஏன் சார்னு இப்படி’னு தரணி சார்கிட்ட கேட்டப் போ, ‘மாஸ்டர், நான் உதவி இயக்குநரா இருந்த காலத்துல இருந்து உங்க வொர்க்கைக் கவனிச்சிருக்கேன். இந்தப் படத்துல உங்ககூட சேர்ந்து வொர்க் பண்ண ஆசைப் பட்டேன்.
ஆனா, ராஜூசுந்தரம் மாஸ்டருக்கும் விஜய்க்கும் கெமிஸ்ட்ரி சரியா இருக்கிறதால அதை மாற்ற முடியல. அதனால நீங்க இந்த ரோல்ல நடிங்கனு சொன்னார் சரி இவ்வளவு பெரிய ஹீரோ நடிக்கிற படமாச்சேனு நானும் நடிக்க ஒப்புக்கிட்டேன் என்று கூறியுள்ளார்…