குக் வித் கோமாளி அஷ்வினுக்கு ஜோடியாக நடித்த 6 பிரபல கதாநாயகிகள் .. எந்தந்த நடிகைகள் என்று தெரியுமா ?? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2-ல் கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானவர் தான் அஷ்வின்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து கொண்டே வருகிறது, என்ன சொல்ல போகிறாய் என்ற படத்திலும் தற்போது இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அஷ்வின் அமைதியாக தெலுங்கு வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மீட் கியூட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை பிரபல தெலுங்கு நடிகர் நானி தயாரித்துள்ளார்.

மேலும் இந்த வெப் சீரிஸில் அஷ்வின் உடன் சுனைனா, அடா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா, வர்ஷா பொல்லம்மா ஆகிய 6 ஹீரோயின்கள் நடித்துள்ளார்களாம். இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.