தமிழ் சினிமாவை பொறுத்தவரை எத்தனயோ புதுமுக இயக்குனர்கள் தற்போது வந்த போதிலும் அன்றிலிருந்து இன்று வரை சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு இயக்குனராக இருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள். இவரது படங்கள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு தான். அந்த அளவில் இவரது படங்கள் அணைத்தும் மக்களிடையே பெரிதளவில் பார்க்கபடுவதோடு நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய் என இவர் இயக்கதா முன்னணி நடிகர்களே இல்லை எனலாம். ஆரம்பத்தில் பிரபல இயக்குனருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவிக்குமார் 1990-ம் ஆண்டு புரியாத புதிர் எனும் திரைபடத்தை முதன்முதலில் இயக்கினார்.இவர் இயக்கியாக முதல் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் இயக்கிய நாட்டாமை,
படையப்பா, முத்து, தசாதாவரம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்று தந்தது. மேலும் இவர் இயக்குனராக கலக்கியதோடு மட்டுமில்லாமல் பல்வேறு குணசித்திர மற்றும் காமெடி வேடங்களிலும் கலக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார்.ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.
இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை படைத்து உள்ளது.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஐஸ்வந்தி, மோனிஷா என 2 மகள்கள் உள்ளார்கள்.
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களின் மகள் மோனிஷா தற்போது சென்னையில் புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிகுமாரின் மகள் மோனிஷா அவர்கள் டெர்மடாலஜி படிப்பை படித்து இருக்கிறார். இவருடைய கணவர் அரவிந்த் அவர்களும் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.