கௌதம் கார்த்திக்கின் சூப்பர்ஹிட் பாடலை இந்த தொகுப்பாளினி தான் பாடியுள்ளாரா.? அட அந்த தொகுப்பாளினி யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

கௌதம் கார்த்திக்கின் சூப்பர்ஹிட் பாடலை இந்த தொகுப்பாளினி தான் பாடியுள்ளாரா.? அட அந்த தொகுப்பாளினி யாரென்று நீங்களே பாருங்க ..!!
தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை பொறுத்தமட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருப்பதோடு இதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள்.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்களிடையே விரும்பி பார்க்கபடுகிறதோ

அதே அளவிற்கு அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்களிடையே பலத்த வரவேற்பையும் புகழையும் பெற்று வருகின்றனர்.இந்த வகையில் இந்த சேனலில் பல தொகுப்பாளர்கள் பேமஷாக உள்ள நிலையில் இவர்களில் ஒருவராக தனக்கென தனி ஒரு அடையாளத்தோடு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் தேவராட்டம். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் தேவராட்டம் படத்தில் மதுர பளபளக்குது என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அந்த பாடலில் ‘ரங்கு சிலுக்குதான் சிக்குன்னு சமஞ்சு வந்தாளாம்’ என்ற வரியை சிக்குன்னு தொகுப்பாளினி பிரியங்கா பாடி இருந்தாராம்.தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே! என்று அந்த வரியை ஹேஸ்டேக் செய்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்க் ஆக்கி வருகிறார்கள்