அதென்னவோ சமீப காலமாக.. ஒரு சேனலில் இருந்து.. இன்னொரு சேனலுக்கு நடிகர்கள் மாறி மாறி சென்றுக்கொண்டிருக்கின்றனர்…ராதிகா என்றாலே சன் டிவிதான் என்று இருந்த நிலையில் தற்போது அவர் கூட பிற சேனல்களில் சீரியல் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்திருந்தது…
இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை சீரியலில் மங்களம் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை குஷ்பூ நடிக்க உள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு முதல் கோகுலத்தில் சீதை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டராக இருந்த நந்தாவும், கதாநாயகியாக புதுமுக நடிகை ஆஷா கவுடாவும் நடித்து வருகின்றனர். வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்த நடிகைகள் நளினி, ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த தொடருக்கு இன்னும் மவுசு சேர்க்கும் விதமாக நடிகை குஷ்பூ இணைந்துள்ளார். 90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அவர், கதாநாயகி அந்தஸ்துக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பின்னர் சின்னத்திரையில் கால்பதித்த குஷ்பு, குங்குமம், கல்கி உள்ளிட்ட பல தொடர்களில் வரிசையாக நடித்தார்.
அதைத்தொடர்ந்து நந்தினி, லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சன் டிவி சீரியலில் நடித்தார்.. இப்போது கோகுலத்தில் சீதை நாடகத்தில் அச்சு மாமி, மங்கள்ம் மாமி, ஊறுகாய் மாமி, டாக்டர் மங்களம். என புது வித கதைக்களத்தில் நடிக்கிறார்.. அதன் புரோமோ வே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..
https://www.instagram.com/p/CR3TyaGpvPx/?utm_source=ig_web_copy_link