சமூக இணையதளத்தில் கலக்கும் ஐஸ்வர்யராயின் மகளின் தற்போதைய புகைப்படம்!! அட இவ்ளோ வளர்ந்துட்டாங்களா? ஐஸ்வர்யாவின் அழகையே மிஞ்சும் பேரழகு ..

சினிமா

இந்தியாவின் உலக அழகி என்ற பட்டம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா . நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பக்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான மகளும் இருக்கிறார். இவருடைய மகள் பெயர் ஆராத்யா.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு தேவதையாகவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார். மேலும் எத்தனை உலக அழகிகள் வந்தாலும் ஐஸ்வர்யா ராய் பிடித்திருக்கும் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.

இந்நிலையில் தற்போது ஐஸ்வரியாவின் மகள் ஆராத்யாவை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் சரத்குமார், ராதிகா, வரலக்ஷ்மி ஆகியோர் ஐஸ்வர்யா ராய் குடும்பத்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் அன்பு மகள் ஆராத்யாவும் இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நடிகை ஐஸ்வர்யாவின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா!! என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.