சற்றுமுன் நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் ம ருத்துவம னையில் சி கிச்சை ப லனின்றி திடீர் மரணம்.. கடும் அ திர் ச்சியில் ரசிகர்களும் பிரபலங்களும்..!!

சினிமா

கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுத்துவந்த பிரபல நடன மாஸ்டரும் நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்னிந்திய அளவில் பிரபலமானவரும், முன்னணி நடிகர்களின் படங்களில் குறிப்பாக, திருடா திருடி, வரலாறு உள்ளிட்ட படங்களின் வெற்றிப்பாடல்களுக்கு நடனம் அமைத்தவருமான சிவசங்கர் மாஸ்டர் 80களில் இருந்து திரைத்துறையில் இயங்கி வந்தவர்.

அண்மைக்காலங்களில் கண்ணா லட்டு திண்ண ஆசையா, தானா சேர்ந்த கூட்டம், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சிவசங்கர் மாஸ்டருக்கு சிகிச்சைக்காக அவரது மகன்கள் உதவி கேட்டிருந்தனர்.

நடிகர்கள் உட்பட, திரைத்துறையினரும் தங்களாலான நிதி உதவிகளை செய்துவந்த நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்த சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

சிவசங்கர் மாஸ்டரின் மறைவுக்கு திரையுலகமும், ஊடகங்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றன.