சற்றுமுன் பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல தயாரிப்பாளர் உடல்நல க்கு றைவால் தி டீரெ ன்று ம ர ணம்.. இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகமும் ரசிகர்களும் ..!!!

சினிமா

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்த பிஸினஸ் மேன், கிக், உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர். வெங்கட். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த ஆர்.ஆர்.வெங்கட் , சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர் தெலுங்கு மட்டுமின்றி ஏக் ஹசினா தி, ஜேம்ஸ் ஆகிய ஹிந்தி படங்களையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த ஆர்.ஆர்.வெங்கட் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .