சற்றுமுன் பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்… சோகத்தில் வாடும் திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகரும், நகைச்சுவை நடிகருமான ஜுனியர் பாலையாவின் இயற்பெயர் ரகு. இவர் சினிமாவிற்காக தனது பெயரை ஜுனியர் பாலையா என்று மாற்றிக் கொண்டார். 1975ம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் அறிமுகமானார்.

மேலும்  அதன் பின் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் இறுதியாக 2021ல் வெளியான என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின் திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை. சினிமா மட்டுமின்றி சீரியலிலும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அசத்தினார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த ஜுனியர் பாலையா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பிற்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…