80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி நேற்று காலமானார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஹ்மான் கே.பாலச்சந்தர் இயக்கிய புதுபுது அர்த்தங்கள் திரைப்படத்தில் அற்புதமாக நடித்து தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
கதாநாயகனாக நடித்து வந்த ரகுமான், பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். இத்திரைப்படம் இவருக்கு நல்ல திருப்புனை திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 84. இதேவேளை, சாவித்ரியின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள நிலம்பூரில் நடைபெற உள்ளது.