சற்றுமுன் பிரபல நடிகை உடல் நலக்குறைவால் திடீர் மரணம்!! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் தான் தான் ஜெயதேவி.

மேலும் இவர் வாழ நினைத்தால் வாழலாம், நன்றி மீண்டும் வருக, புல்லாங்குழல், அடுப்பு ஊதுகிறது போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். விலாங்கு மீன் புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி நாடக கலைஞராக தனது வாழ்க்கையை 20 வயதில் நடிகை ஜெயதேவி ஆரம்பித்து சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் உடல் நல குறைவின் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.  இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…