சற்றுமுன் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பிரபல இசையமைப்பாளர் மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்…!!

சினிமா

திரையுலகில் சமீபகாலமாக தொடர்ந்து மரண செய்திகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அந்த வகையில் மலையாளத் திரைப்படங்களின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தசி.

இவர் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒரியா, வங்காளம், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில்  படங்களுக்கும் இசையமைத்துள்ளார். திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய நண்பர்களுடன் ரியல் எஸ்டேட் வியாபாரம் தொடர்பாக கேரள மாநிலத்திற்கு சென்று மீண்டும் சென்னைக்கு திரும்பு கையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இவர் மட்டுமல்லாமல் இவருடைய நண்பர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இவர்கள் சென்ற கார் திருப்பூர் மாவட்டம் அவினாசி, பழக்கரை பைபாஸ் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதனையடுத்து கார் அருகே இருந்த தடுப்பு சுவர் ஒன்றின் மீது பலமாக மோதியது.

மேலும் இதனைத் தொடர்ந்து காரின் முன் பக்கத்தில் இருந்த இசையமைப்பாளர் தசி மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவரின் திடீர்மரணத்திற்கு  பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…