சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண்க்கு திருமணம் முடிந்துள்ளது… மணப்பெண் யார் தெரியுமா? அழகிய ஜோடியின் திருமண புகைப்படம் இதோ…!!

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரும், நடிகருமான ஹரிஷ் கல்யாண் திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இவர் நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை இன்று திருமணம் செய்து கொண்டார்.

ஹரிஷ் கல்யாண் தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓமணப்பெண்ணே, கசடதபற என போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜூன் மாதம் நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. அதன் பின் அவரது நிச்சயதார்த்தம் இந்த மாத ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது.

அதுமட்டுமின்றி தசரா விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமாருக்கு சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

மேலும் இவரது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது.