சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த வேம்புலியின் மனைவி யார் தெரியுமா.? அட இந்த பிரபல தொகுப்பாளினியா.? அ திர்ச் சியளிக்கும் தகவல் உள்ளே..!!

சினிமா

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் நேற்று அமேசான் பிரைம்-இல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் வெளிநாட்டில் முரட்டு விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக கொண்டு தான் இந்த படத்தை உருவாக்கி உள்ளார்கள்.

மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிகவும் சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகின்றது. அப்படி படத்தில் மக்கள் கொண்டாடும் வேடத்தில் ஒன்று வேம்புலி.

அந்த வேடத்தில் நடித்தவரின் பெயர் ஜான். இவர் திருமணம் செய்திருப்பவர் ஒரு தொகுப்பாளினி.  பிரபல தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த பூஜா ராமச்சந்திரன், அவருடன் பணியாற்றிய கிரேக் கல்லியாட் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  2017ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதன் பின் தனியாக வாழ்ந்து வந்த பூஜா ராமச்சந்திரன் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

மேலும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.  தற்போது ஜான் கொக்கன் என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். இதோ அவர்களின் புகைப்படம் நீங்களும் பாருங்கள்…