சிட்டிசன் திரைப்படத்தில் நடிகை மீனா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது… இந்த நடிகை தானாம்… அட இவங்க இந்த சீரியல் நடிகையாச்சே!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகிய பொறுத்தவரை தற்போது இருக்கும் காலகட்டத்தில் எத்தனையோ புது விதமான கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி வரும் போதிலும் கூட அந்த காலத்தில் வந்த பல படங்கள் ஒரு சில இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் அந்த வகையில் கடந்த 2001-ம் ஆண்டு அதாவது 20 ஆண்டுகள் கடந்த நிலையில் பிரபல முன்னணி நடிகர் தல என அனைவராலும் அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிட்டிசன். இந்த படத்தில் நடிகர் அஜித் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி  பல வே டங்க ளிலும் நடித்து அசத்தி இருப்பார்.

இந்த படத்தில் மகன் அஜித்திற்கு ஜோடியாக பின்னணி பாடகி வசுந்தரா நடித்திருப்பார். அப்பா அஜித்திற்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருப்பாற். இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த படத்தில் அப்பா அஜித்திற்கு ஜோடியாக முதலில் மீனாவிற்கு பதிலாக வேறு நடிகை தான் நடிக்க இருந்தார்.

அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சேது இந்த அப்படத்தில் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக அபிதா குஜலம்பால் எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அபிதா தான். இந்த படம் தான் இவர் கதாநாயகியாக அறிமுகமான படமாகும்.

இந்த படம் நடிகர் விக்ரமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில் இந்த படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமுக்கு சீயான் விக்ரம் எனும் பெயர் உருவானது. மேலும் இந்த படத்திற்கு பிறகு நடிகை அபிதா பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து அதன் பிறகு பிறகு ஆளே கா ணாம ல் போனார்.

இப்படி இருக்கையில் இவருக்கு சிட்டிசன் படத்தில் நடிகை மீனாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது இருப்பினும் அவர் அதை ம றுத்து விட்டார். ஆனால் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் படத்தில் பெரிதளவில் பேசப்பட்டது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வை ராளாகி வருகிறது.