சினிமாவில் காமெடி நடிகராக 1000 படங்களில் நடித்த ஒரே நடிகர்!! அதன் பிறகு தான் கவுண்டமணி, வடிவேலு எல்லாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா??

Tamil News

சினிமாவைப் பொருத்தவரை ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருக்கின்றார்கள். ஒரு காலகட்டத்தில் ஒரு சிலரின் நகைச்சுவைக்காகவே ஏராளமான திரைப்படங்கள் ஓடியதும் மேலும், திரைப்படத்தின் கதை எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று நகைச்சுவை நடிகருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

மேலும் திறமை இருந்தால் நீண்ட தூரத்திற்கு அளவுக்கு பயணம் தொடர்ந்து வருகின்றது. அந்த வகையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காமெடியனாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து நடிகர் பிரம்மானந்தம்.

இவருக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது திறமையை வெளிக்காட்டி நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் காமெடி உச்சத்தில் இருந்தவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்கள். அதே போன்ற தென்னிந்திய அளவில் பல்வேறு திரைப்படங்களில் உச்ச நடிகராக நடித்தவர் நடிகர் பிரம்மானந்தம்.

இவர் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவருக்கு தற்போது 65 வயது ஆகின்றது. இப்போது கூட பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தமிழில் மரகத நாணயம், தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

மேலும் இவர் தற்போது நடிக்கும் திரைப்படங்களில் சுமார் இரண்டு கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது அதிகமாக இருந்தாலும் இவரது காமெடி இன்று வரை குறையாமல் பார்ப்போரை சிரிக்க வைத்து வருகின்றார்..