தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா தற்போது அமெரிக்காவில் பிரபலமான கல்லூரியில் நடிப்பு, இயக்கம், எழுதுதல் போன்ற துறையில் பயிற்சி பெற்று வருகிறார்.
மேலும் ஏற்கனவே இவர் வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் ஆவார். இந்நிலையில் அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மேலும் அந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ரோஜாவின் மகளை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்த நம்பகரமான தகவல் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது…