சில வருடங்களாக நடிகர் சிம்புவை காதலிக்கும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் தங்கை .. இணையத்தில் வெளியான செய்தியை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!
சிலம்பரசன், தமிழ் திரைப்பட பிரபல நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்திரன் மற்றும் உஷா ராஜேந்திரன் அவர்களுக்கு மூத்த மகனாக 1983 பிப்ரவரி 3ல் பிறந்துள்ளார். இவர் தமிழ் நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொங்கறப்பள்ளி என்னும் ஊரை சேர்ந்தவர். சிலம்பரசனுக்கு குறளரசன் என்னும் தமயனும், இலக்கியா என்ற சகோதிரியும் உள்ளனர்.
ஒரு திரைக்குடும்பத்தில் பிறந்த இவர் தன் சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக தனது அப்பாவின் இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்தார். தந்தை இயக்கிய பல படங்களில் நடித்து நடிப்பினை பற்றி கற்றறிந்த இவர், தனது படிப்பினை முடித்த கையேடு தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சிம்பு அவர்கள் தற்போது வெந்து தொடர்ந்து காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர்களின் பட்டியலில் சிம்புவின் பெயர் முதலிடத்தில் இருக்கும் என்று சொல்லலாம்.
தினமும் சிம்புவின் திருமணத்தை பற்றி ஏதாவது தினமும் தகவல் வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட நடிகர் ஜெய் அவர்கள் சிம்பு அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வார் என்று அறிவித்து இருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சாய் காயத்ரி. இவருடைய தங்கை தான் மதுரா. இவரும் சின்னத்திரையில் நடிகை ஆவர் . இவர் சிம்புவை காதலிப்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பது, பள்ளி படிக்கும் காலத்திலேயே காலையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிம்புவின் பாடல் ஒன்றை கண்டேன்.அப்போது பார்த்ததிலிருந்து சிம்பு மேல் எனக்கு ஒரு கிரஸ். அதன்பின் அந்த படம் தம் என்றும் அவர் பெயர் சிம்பு என்றும் கண்டுபிடித்தேன். அப்போதிலிருந்து 16 சிம்பு நான் சிம்புவை ஒருதலையாக காதலித்து வருகிறேன்.நடிகர் சிம்புவை நேரில் பார்த்தால் உடனடியாக ப்ரொபோஸ் செய்துவிடுவேன் என்று கூறி சிம்புவை ப்ரொபோஸ் செய்யும் மதுரா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.