சூப்பர் சிங்கர் பிரியங்கா என்ன தொழில் செய்கிறார் என்று யாருக்கும் தெரியுமா.? இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் பிரியங்கா. அதில் டாப் போட்டியாளராக இடம்பிடித்த அவர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகவில்லை. ஆனாலும் அவரது குரல் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானது. சின்னச் சின்ன வண்ணக் குயில் பாடலின் பிரியங்கா வெர்ஷன் என்று யூடியூபில் தேடிப் பார்க்கும் அளவுக்கு தனது குரல் வளத்தால் வசீகரித்தவர்.
இதைத்தொடர்ந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இடையில் பாடல்கள் பாடியிருக்கும் பிரியங்கா மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யுடன் மேடை நிகழ்ச்சி ஒன்றிலும் பாடியுள்ளார்.
இந்த நிலையில் பிரியங்கா பாடுவதை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு தற்போது முழுநேர பல் மருத்துவராக பணி செய்து வருகிறார். தற்போது அவர் மருத்துவ மனையில் நோயாளி ஒருவருக்கு பல் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் புகைப்படத்தினை சமூக இணையத்தில் வெளியிட்டார் ..
இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..