தமிழ் சினிமாவில் நான் 40 வருடங்களாக நடிக்கிறேன். ஆனால் எனக்கு அந்த நடிகர் கூட நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது இன்று வரை நடக்கவே இல்லை. என்று பிரபல நடிகை ரேணுகா கூறியுள்ளார். 40 வருடமாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை ரேணுகா. இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் மலையாள சினிமாத் துறையில் பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமானார். சமீபத்தில் நடிகை ரேணுகா ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் நான் ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு தான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. சினிமா பற்றி எனக்கு அந்த அளவு பெரிதாக ஒன்றும் தெரியாது.
இயக்குனர் பாலச்சந்தரும், டி.ராஜேந்திரும் தான் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார்கள். நான் கமல், சூர்யா போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால் இது வரைக்கும் நடிகர் ரஜினிகாந்தோடு நான் நடித்ததே இல்லை. தற்போது வரை இது எனக்கு பெரிய மனக்குறையாகவே இருக்கிறது.
நான் நாடகங்களில் நடிக்கும் போது அதை பார்த்து ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார். அற்புதமாக நடித்துள்ளீர்கள் என்று என்னை பாராட்டினார். அப்போதில் இருந்தே எனக்கு நடிகர் ரஜினியோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. 40 வருடங்களாகியும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை. அது எனக்கு வருத்தமாக உள்ளது.
மேலும் அதே போல விஜய், அஜித் கூடவும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ரஜினியோடு ஒரே ஒரு முறையாவது நடித்து விட வேண்டும். அது தான் என் ஆசை. எனக்கு அந்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்பிக்கையாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்…