சொந்த கணவர் மீதே புகார் கொடுத்த பிரபல நடிகை..!! மனைவி கொடுத்த புகாரால் சீரியல் நடிகர் கைது..!!

சொந்த கணவர் மீதே புகார் கொடுத்த பிரபல நடிகை..!! மனைவி கொடுத்த புகாரால் சீரியல் நடிகர் கைது..!!

Tamil News

பிரபல நடிகை ஒருவர் தனது கணவர் மீது குடும்ப வன்முறை புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’விஸ்வதுளசி’. இந்த திரைப்படத்தில் மம்முட்டி, நந்திதாதாஸ், மனோஜ் கே ஜெயன் உள்பட பலர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தில் இளவயது நந்திதா தாஸ் கேரக்டரில் நடித்தவர் நடிகை அம்பலிதேவி. இவரும் சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அம்புலி தேவிக்கும், ஆதித்யன் ஜெயனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து விரைவில் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொல்லம் காவல் நிலையத்தில் திடீரென தனது கணவர் ஆதித்தியன் ஜெயன் மீது நடிகை அம்பலிதேவி குடும்ப வன்முறை பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஆதித்தியன் ஜெயனை போலீசார் கைது செய்து அதன் பின்னர் ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.