ஜெயம் ரவியின் தாஸ் பட நடிகையா இது? 37 வயதிலும் இளமையா அப்படியே இருக்காங்களே! புகைப்படத்தைப் பார்த்து வியப்பில் ரசிகர்கள்...!!

ஜெயம் ரவியின் தாஸ் பட நடிகையா இது? 37 வயதிலும் இளமையா அப்படியே இருக்காங்களே! புகைப்படத்தைப் பார்த்து வியப்பில் ரசிகர்கள்…!!

Tamil News

ஜெயம் ரவி நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாஸ். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.

ஆனால் தாஸ் படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அமைந்த ஒவ்வொரு பாடல்களும் இன்றும் பலருக்கும் ஃபேவரைட்.

அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் தான் ரேணுகா மேனன். மலையாள நடிகையான ரேணுகா தமிழில் பிப்ரவரி 14 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தாஸ் படம் வெளியானது.

தாஸ் படத்திற்கு பிறகு ரேணுகாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அடுத்ததாக ரேணுகா மேனன் மற்றும் ஆர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான கலாபக் காதலன் திரைப்படம் சரியாகப் போகாததால் அவருடைய மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்தது.

அதன்பிறகு அவர் நடித்த மதன் என்ற திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகிய ரேணுகா மேனன் சுராஜ் மேனன் என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாக இவரைப் பற்றிய தகவல்கள் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது தன்னுடைய 37 வயதில் இரண்டு பெண் குழந்தைகளுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தாஸ் படத்தில் பார்த்தது போல அப்படியே இருக்கீங்களே என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.