ஜெயம் ரவியின் படத்தில் நடித்த காமெடி நடிகரை ஞாபகம் இருக்கா ? அட இவருக்கு கல்யாணம் கூட ஆகி விட்டதா.? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர்கள் துணை நடிகர்களாக நடித்தே அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பிரபலமான ஒருவராக மாறி இருக்கின்றனர். அப்படி ஆரம்பத்தில் நடித்து வந்த பல காமெடி நடிகர்கள் இன்று படங்களில் நடிக்காமல் இருந்து வருகின்றனர். அது போல் துணை காமெடி நடிகர்களாக களம் இறங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் சுமன் ஷெட்டி. இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜெயம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.அபோது இருந்த வடிவேலு சந்தானம் என்ற பெரிய பெரிய நடிகர்களுக்கு மத்தியில் கூட அதிகமாக மக்களை கவர்ந்து வந்தார் சுமன். மேலும் அவருக்கு இருந்த குண்டான தோற்றம் இவருக்கு பிளஸ் ஆக அமைந்து.

அதனை வைத்தே பல படங்களில் நடித்து கலக்கி வந்தார். மேலும் பல படங்களில் பல மொழிகளில் பல வாய்ப்புகள் குவிந்தன. தமிழ், தெலுங்கு இரண்டு பக்கமும் மாறி மாறி நடித்து வந்தார்.

விஷால் தனுஷ் என்று அப்போது வளர்ந்து வந்த நடிகர்களுடன் காமெடியில் கலக்கியவர் இப்பொது பட வாய்ப்புகள் எதுமே இல்லாமல் சினிமா பக்கமே வராமல் இருந்து வருகின்றார்.

மேலும் சில விளம்பர படங்கள்நடித்ததுடன் சேர்ந்து மொத்தமாக 14 தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பிறந்ததே ஒரு தொழிலதிபருக்கு மகனாக தான்.ஆனாலுமே தனக்கென ஒரு பெயர் இருக்க வேண்டும் என்று கூறி சினிமாவுக்கு வந்து சில காலமே நீடிக்க முடிந்தது. இப்போது மீண்டும் தனது தொழிலை கவனித்து கொள்ள சினிமாவை விட்டு விலகி விட்டார்.

இவர் பேசும் ஸ்லாங் மற்றும் பாடி ஸ்டைல் இவரை சினிமாவுக்கு கொண்டு வந்தது.கடந்த 2009-ம் ஆண்டு நாக பவானி என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் 2015-ம் ஆண்டு “சொம்பு சொன்ன சத்தியம்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

 

அந்த படத்திற்காக எடுத்த புகைப்படங்களில் முன்பு அவர் நடித்து வந்த போது இருந்ததை விட மிகவும் உடலை குறைத்து இப்போது வித்தியாசமாக இருக்கின்றார். இந்நிலையில் தற்போது நடிகர் சுமன் ஷெட்டி யின் மகன் மகள் இருக்கும்

புகைப்படம் ஓன்று சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் சுமன் ஷெட்டிக்கு இவ்வளவு பெரிய மகனும் மகளும் இருக்கிறார்களா என ஆச்சர்யத்தில் உள்ளனர்.