தமிழ் சினிமாவில் கடந்த 2003ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த படம் ஜே.ஜே. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் பிரியங்கா கோத்தாரி. மேலும் இவர் நடிப்பிற்கு வரும் முன் தனது 20 வயதில் ஒரு ஹிந்தி மியூசிக் ஆல்பத்தில் நடித்தார்.
அதன் பின்னர் தான் ஜே.ஜே. படத்தில் புகழ் பெற்று அதன் பின் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்தார். மேலும் இதனை தொடர்ந்து அவர் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற 18 + படத்தில் நடித்தார். இதன் முலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பரவியது.
மேலும் இந்தியா முழுவதும் இவரை பேச வைத்தது இந்த படத்தினை தொடர்ந்து அவருக்கு சொல்லுமளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் கடைசியாக ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு குத்து டான்ஸ் போட்டார். அதன் பிறகு சொல்லும் அளவிற்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது செட்டிலாகி விட்டார்.
பல வருடங்களுக்கு பிறகு பிரியங்காவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரியங்காவா இது “இப்படி குண்டாகி ஆளே மாறி விட்டார். என கமெண்ட் செய்து வருகிறார்கள்…