தனது கணவர் பாலு மகேந்திரா மறைவிற்கு பிறகு மறுமணம் செய்யாதது ஏன்?? ஓபனாக கூறிய நடிகை மௌனிகா…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 1985ம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திராவால் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மௌனிகா. அந்த படத்திற்கு பிறகு தாலாட்டு கேக்குதம்மா, வண்ண வண்ண பூக்கள், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். பாலு மகேந்திரா இரண்டு திருமணத்திற்கு பிறகு நடிகை மௌனிகாவை மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

மௌனிகா மற்றும் பாலு மகேந்திராவிற்ம் 30 வருடம் வித்தியாசம். பாலு மகேந்திரா இறக்கும் நேரத்தில் இரண்டு சத்தியம் கேட்டாராம். முதல் சத்தியம் நான் இறந்த பிறகு உனக்கு பிடித்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றாராம்.

மேலும் அதன் பிறகு இன்னொன்று மறுமணம் செய்ய வேண்டும் என்று கேட்டாராம் ஆனால் மௌனிகா இதற்கு மட்டும் என்னால் சத்தியம் செய்ய முடியாது என்று கூறி விட்டாராம்…