தரியுலகி பொறுத்தவரை தற்போது வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றன. அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் விரும்பி பார்க்கபடுவதோடு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே வெ குவாக பிரபலபடுத்தி கொள்கிறார்கள்.
மேலும் இந்நிலையில் இந்த சேனலில் ராஜ ராணி சீரியல் மூலம் அறிமுகமாகி அதன் பின் பிரபலமானவர்கள் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டன. மேலும் திருமணத்திற்கு பின் இருவரும் தொடர்களில் நடித்து வந்த நிலையில் இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது .
அதன் பின் சில காலம் தொடர்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஆல்யா தற்போது ராஜா ராணி இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் சஞ்சீவ் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆலியா மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த நிலையில் சீரியலில் இருந்து விலகி விட்டார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன் சஞ்சீவ் தனது இணைய பக்கத்தில் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில் அவரது ரசிகர் ஒருவர் உங்களது இரண்டாவது குழந்தைக்கு என்ன பெயர் வைக்கபோறீங்க என கேட்டுள்ளார். அதற்கு சஞ்சீவ், பெண் குழந்தை பிறந்தால் லைலா எனவும் ஆண் குழந்தையாக இருந்தால் அர்ஷ் என பெயர் வைக்கலாம் என முன்னாடியே முடிவு செய்து வைத்திருந்தோம்.
மேலும் இப்படி இருக்கையில் நடிகை ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின் அர்ஷ் என பெயர் வைத்துள்ளோம் இது ஒரு புறம் இருக்க இரண்டாவது குழந்தை கருவில் இருக்கும் போதே அந்த குழந்தைக்கு சிறப்பான பரிசுப் பொருள் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள். ஆல்யாவின் பேபி பம்பை ஒரு மாதிரி அச்சாக செய்து உள்ளதோடு இதில் தாய்ப்பாலை கலந்து செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்கள்.
தாய்ப்பால் வைத்து உருவான பல ஆபரணங்களை செய்யும் இன்ஸ்டா பக்கத்தையும் தங்களது இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சஞ்சீவ் ஏற்கனவே வைத்திருந்த ஐம்பது லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த பென்ஸ் காரை தனது சகோதரனுக்கு பரிசாக கொடுத்துள்ளார். சமீபத்தில் வாங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தங்களது மினி கூப்பர் காரையும் விற்று விட்டு தங்களது இரண்டாவது மகன் பிறந்ததை கொண்டாடும் வகையில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள்.
மேலும் இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் வை ரளாகி வருகிறது.