தளபதி விஜயின் தீ வி ர ரசிகைகள் என் மகள்கள்!! விஜயை பார்க்க தனது மகள்களை அழைத்துச் சென்ற குஷ்பூக்கு என்ன நடந்தது என்று தெரியுமா?? இதோ ..!!

சினிமா

90களில் மிக பெரிய நடிகையாக இருந்து வந்த நடிகை குஷ்பூ இப்போது அவர் மகள்களை நடிகர் விஜயினை பார்க்க அழைத்து சென்ற ஒரு நிகழ்ச்சியினை பற்றி கூறி இருக்கிறார். அந்த காலத்தில் விஜயை விட மிக பெரிய ஒரு இடத்தில் இருந்த நடிகையாக இருந்து வந்தார் ஆனால் அப்படி மிக பெரிய ஒரு நடிகையாக இருந்து வந்தாலுமே அவரின் மகள்கள் இருவருமே என்னமோ விஜயினை மிக பெரிய ஒரு ரசிகைகள்.

அந்த காலத்தில் இருந்த மிக பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருந்த குஷ்பூ திருமணம் ஆனதில் இருந்து சினிமா விட்டு விலகினார் மேலும் இந்த சினிமாவை விட்டு விலகிய காலத்தில் அரசியல் பக்கம் சேர்ந்தார். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

சமீபத்தில் இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையினை குறைத்து இருந்த புகைப்படங்கள் மிக அதிகமாக சமூக வலைதள பக்கங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது மகள்கள் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “எனது மகள்கள் இருவரும் தளபதி விஜய்யின் மிகவும் தீவிரமான ரசிகர்கள். நடிகர் விஜய் நடிக்கும் படம் வெளியாகும் அன்று அந்த படத்தின் சட்டையை அணிந்து தான் திரையரங்கிற்கு செல்வார்கள்.

ஒரு நாள் அவர்களை விஜயினை நேரில் பார்க்க அவரது வீட்டிற்க்கே அழைத்து சென்று இருந்தேன். இருவருமே வீட்டில் இருந்து கிளம்பிய போது மிக ஆர்வமாக கிளம்பினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் விஜய்யை பார்த்ததும் வெட்கப்பட்டு என் பின்னால் ஒளிந்து கொண்டார்கள் என கூறியுள்ளார். நடிகை குஷ்புவின் மகள்கள் விஜயின் தீவிர ரசிகைகள் என்பதை அறிந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.